[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

சத்ருகன் சின்ஹா தொகுதியை ரவிசங்கர் பிரசாத்துக்கு வழங்க பாஜக முடிவு

bjp-may-give-shatrughan-sinha-s-seat-to-ravi-shankar-prasad

மத்திய அரசையும் பாஜக தலைமையையும் விமர்சித்து வரும் சத்ருகன் சின்ஹாவின் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னாள் மத்திய அமைச்சர் சத்ருகன் சின்ஹா. பீகார் மாநிலம், பாட்னா தொகுதி பா.ஜ. எம்.பி.யான அவர், பிரதமர் மோடியையும், கட்சி தலைமையையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் கூட, ‘மத்தியில் ஆட்சி மாற்றத்துக்கான சரியான நேரம் வந்தாகி விட்டது; புதிய தலைமை வரவேண்டும் என்று நினைக்க வில்லையா?’ என்று கேட்டிருந்தார். இது பரபரப்பானது.

இந்நிலையில், தொடர்ந்து பாஜக தலைமை மீது எதிர்ப்பு தெரிவித்து வரும் அவரை கழற்றிவிட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து பாராளுமன்றத் தேர்தலில் அவரது பாட்னா சாகிப் தொகுதியில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. ரவிசங்கர் பிரசாத், இப்போது பீகார் மாநில மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். இதற்கிடையே சத்ருகன் சின்ஹா, அவரது தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. 

பாட்னா தொகுதியில் கயஸ்தா என்ற சமூகத்தினர் அதிகம். வெற்றியை நிர்ணயிப்பது இவர்கள் ஓட்டுகள் தான். ரவிசங்கரும் சின்காவும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சின்காவை தோற்கடிக்க ரவிசங்கரை பாஜக களமிறக்குவதாகக் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close