[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம்
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி

 ‘தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படம் கூடாது’ - தேர்தல் ஆணையம் 

election-commission-said-dont-use-jawans-photos-in-election

அரசியல் கட்சிகளின் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதனால் அதற்கு முன்பு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்களை நடத்திவந்தது. அத்துடன் தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனையையும் நடத்தி வந்தது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் தகவல் தெரிய வந்துள்ளது. தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான கடைசி கட்ட ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் இம்முறை தேர்தலை 7 அல்லது 8 கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ விழாக்கள் குறித்த படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close