[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

புவிசார் குறியீடு அந்தஸ்தை பெற்ற ஈரோடு மஞ்சள்!

erode-turmeric-receives-geographical-indication-tag

புகழ்பெற்ற ஈரோடு மஞ்சளுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு,  புவிசார் குறியீடு வழங்குகிறது. குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி விண்ணப்பிக்கப்பட்டது.

அதில் சங்க காலத்தில் இருந்து மஞ்சள் பயிரிடும் பழக்கம் தமிழகத்தில் இருந்து வருவதாகவும், மருத்துவ குணம் நிறைந்த மஞ்சள், ஈரோடு மாவட்டத்தில் பெருவாரியாக பயிரிடப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட புவிசார் குறியீடு பதிவுத்துறை, ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. அதைதொடர்ந்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் வைகான் மஞ்சள், ஒடிஷாவின் கந்தமால் மலை மஞ்சள் போன்றவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் தமிழகத்தில் விளையும் மஞ்சளுக்குப் புவிசார் குறியீடு கிடைப்பது இதுவே முதல்முறையாகும்.

ஈரோடு மஞ்சளைப் போலவே தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, நாச்சியார் கோவில் குத்துவிளக்கு, பத்தமடை பாய் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு புவிசார் குறியீடு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close