டெல்லியில் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையேயான அதிகார மோதல் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து டெல்லி அதிகார வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகார மோதல் தொடர்ச்சியாக நிலவி வருகிறது. ஆளுநர் அதிகாரத்தை மீறி செயல்படுவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக புகார் கூறினார். இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து 3 நீதிபதிகள் அமர்வுக்கு டெல்லி அதிகார வழக்கு மாற்றம் செய்யப்பட்டது.
தீர்ப்பில், இணைச் செயலாளர் மற்றும் அந்த அந்தஸ்திற்கு மேல் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கே உண்டு என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். இணைச் செயலாளர் அந்தஸ்திற்கு கீழ் உள்ளவர்கள் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்திற்குள் வருவார் எனவும் கூறினார். அதேபோல ஊழல் தடுப்பு பிரிவு, விசாரணை ஆணையம் ஆகியவையும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்திற்குள் தான் வருவார் என நீதிபதி சிக்ரி தெரிவித்தார். காவல்துறை தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுக்கு இல்லை என்றும் கூறினார். ஆனால் மற்றொரு நீதிபதியான அசோக் பூஷண் இதற்கு மாறுப்பட்ட கருத்தை தெரிவித்தார். இதன் காரணமாக இவ்வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !