[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு உதவுவோம்- சவுதி அரேபியா
  • BREAKING-NEWS பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய ஆளுநரை சந்தித்து முதல்வர் வலியுறுத்த வேண்டும்- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS தேமுதிகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி முக்கிய ஆலோசனை
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி

ட்ரோல் ஆன பியூஷ் கோயல் பதிவிட்ட ‘வந்தே பாரத்’ ரயில்

piyush-goyals-posted-train-video-trolled-in-twitter

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ள வீடியோவை ட்விட்டர் வாசிகள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

இந்தியாவின் அதிவேக ரயிலாக ‘வந்தே பாரத்’ ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 180 கி.மீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ரயிலை வரும் 15-ஆம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

இதனிடையே இந்த ரயிலின் வேகம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். வீடியோவில் ரயில் வேகமாக செல்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதில், “ இது ஒரு பறவை.. இது ஒரு விமானம்.. மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில். மின்னல் வேகத்தில் கடந்து செல்லக்கூடியது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்த ட்விட்டர் வாசிகள் பலரும் அதனை கலாய்த்து வருகின்றனர். அதாவது வீடியோ சாதாரணமாக இல்லாமல் பாஸ்ட் பார்வேர்ட் செய்யப்படுவதாக கூறியுள்ளனர். வீடியோவை எடிட் செய்யாமல் இருக்கும் வேகத்தை அப்படியே காட்டியிருக்கலாம் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close