[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லி அர்பித் பேலஸ் ஓட்டல் தீ விபத்தில் 17பேர் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயலை கைது செய்தது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்
  • BREAKING-NEWS கோவை: செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்; ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள், 600க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.28 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.57 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS புல்வாமா தாக்குதலை தொடர்ந்து டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகத்தில் மார்ச் 10ம் தேதி தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும்; சரியான, உறுதியான பதிலடி கொடுக்கப்படும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் - சபரிமலை தேவசம் போர்டு ஒப்புதல்

sabarimala-devasam-board-approve-for-all-age-woman-s-to-pray

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கு தேவசம் போர்டு ஒப்புதல் அளித்துள்ளது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் தீர்ப்பு எதிரான மறுசீராய்வு மனு இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்பதற்கு கோயில் தேவசம் போர்டு ஒப்புதல் வழங்கியுள்ளது. கோயிலை நிர்வகிக்கும் தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை ஏற்பதாகவும் கூறியுள்ளது. இத்தனை நாட்கள் பின்பற்றி வந்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாகவும் தேவசம் போர்டு நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. 

முன்னதாக, சபரிமலையில் ஐயப்பன் கோயிலுக்கு செல்ல 10 வயது 50 வயது வரையிலான பெண்களுக்கு தடை இருந்தது. இதனை எதிர்த்து பலரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சென்று வழிபடலாம் என கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. அதிலிருந்து சபரிமலை தனது இயல்பு நிலையை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு செல்லும் சீசனில், பெண் பக்தர்கள் சிலரும் வருகை தந்தனர். அவர்களுக்கு ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இறுதியில் இரண்டு பெண்கள் மட்டும் அதிகாலை நேரத்தில் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துவிட்டனர் என்ற தகவல்கள் வெளியானது. 

sabarimala-is-all-set-to-witness-holy-makara-jyothi-darshan-today

இந்த விவகாரம் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, இதற்கிடையே அகில இந்திய ஐயப்ப சேவா சங்கம் மற்றும் நாயர் சேவா சங்கள் உள்ளிட்ட அமைப்புகள், பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டு வழங்கிய தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் திருந்திருந்தனர். அந்த விசாரனை இன்று நடைபெற்றது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close