[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விசிகவின் திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்கள் கணிப்பைத்தான் பார்க்க வேண்டும்; கருத்துக்கணிப்பை முழுமையாக ஏற்க முடியாது - தம்பிதுரை
  • BREAKING-NEWS லண்டன் நீதிமன்றத்தில் வைர வியாபாரி நிரவ் மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி; இந்திய மதிப்பில் ரூ.4.50 கோடி பிணைத்தொகை செலுத்த தயாராக இருப்பதாக நிரவ் மோடி தரப்பு வாதம்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்பது குறித்து 24 ஆம் தேதி அறிவிக்கப்படும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் தான் போட்டியில்லை என மாயாவதி அறிவிப்பு
  • BREAKING-NEWS அரசியலுக்கு வாரிசுகள் வரக்கூடாது என்பது எந்த சட்டத்திலும் இல்லை- மதுரையில் ஒபிஎஸ் பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.59 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.59 காசுகளாகவும் விலை நிர்ணயம்

வருமான ‌வரிக்கணக்கை தாக்கல் செய்ய அதிநவீன இணையதள சேவை

sophisticated-internet-service-to-file-income-tax-says-central-government

வருமான வரிக் கணக்கை விரைவாகவும் எளிதாகவும் தாக்கல் செய்யும் வகையில் இணையதள சேவை மேம்படுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 ஆயிரத்து 241 கோடி ரூபாய் செலவில் வருமான வரிக் கணக்கை விரைவாகவும் எளிதாகவும் தாக்கல் செய்யும் வகையில் இணையதள சேவை மேம்படுத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் விரைவான மற்று‌ம் துல்லியமான கணக்கீடுகள் ‌சாத்தியமாவதுடன் வருமான வரிதாரர்கள் செலு‌த்திய உபரி தொகையை விரைந்து பெறவும் வாய்ப்பு ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் சர்வதேச தரத்திலான தொழில்நுட்பங்களுடன் வருமான வரிதார‌ரின் வங்கிக் கணக்கில் உபரி தொகையை செலுத்தும் வகையில் புதிய வசதி இருக்கும் என்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் தொடர்பான விவரங்களை பெற ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவித்துள்ள மத்திய அரசு, நவீன ‌மின்னணு ஊ‌டகங்கள் மூலம் வருமான வரிதாரர்களை எ‌ளிதில் தொடர்பு கொள்ளும் நடைமுறை உருவா‌க்க‌ப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தவிர நாட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உள்ளிட்ட 13 மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டமைப்பு, கல்வி சேவைகளை மேம்படுத்த 3‌ ஆயிரத்து 6‌‌39 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல், ''13 பல்கலைக்கழகங்களை மேம்படுத்த கட்டுமைப்புகளை உருவாக்கும் பணி 36 மாதங்களில் நிறைவடையும் . இந்தியா - மாலத்தீவு இடையே எளிதாக சென்று வர ஏற்படுத்தப்பட்ட விசா தொடர்பான ஒப்பந்தத்துக்கும் ஒப்புதல் அளித்துள்ளோம்’’  என்று தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close