[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்
  • BREAKING-NEWS சேலம்-ஓமலூர் பிரதான சாலைக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மணிமண்டபத்தை திறந்துவைத்தார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்த அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோமல் கிராமத்தில் கறுப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டதாக 30பேர் மீது திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மூடுபனி அதிகமாக நிலவும்; தமிழகத்தில் மேகக்கூட்டங்கள் குறைவால் பனி அதிகரித்து காணப்படுகிறது - சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசு பள்ளி ஹாஸ்டலில் குழந்தை பெற்ற 8 ஆம் வகுப்பு மாணவி!

minor-girl-student-gives-birth-to-baby

அரசு பள்ளி ஹாஸ்டலில் எட்டாம் வகுப்பு மாணவி குழந்தை பெற்ற சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் தாரிங்கிபடியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மேம்பாட்டு துறையின் சார்பில் அரசு பள்ளி  செய ல் பட்டு வருகிறது. இங்கு பல மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இங்கு தங்கி படிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக் கு கடந்த சனிக்கிழமை இரவு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவர், சிறிது நேரத்தில் பெண் குழந்தையை பெற்றார். இதனால் விடுதி நிர்வாகிகள் மாணவியை மருத்துவமனையில் சேர்த்தனர். 

இதையடுத்து இந்தச் சம்பவம் பரபரப்பானது. யாருக்கும் தெரியாமல் எப்படி அந்த மாணவி தனது கர்ப்பத்தை மறைத்தார் என்பது புதிராக இருக் கிறது.  இதையடுத்து வேலையில் கவனக்குறைவாக இருந்ததாக, மாவட்ட நிர்வாகம் பள்ளி விடுதியில் பணியாற்றிய 6 பேரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இதைக் கேள்விபட்ட அப்பகுதி மக்கள், சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியை சீரழித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரினர். அங்கு வந்த அமைச்சர் ரமேஷ் மஜி, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. 

இந்நிலையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி கந்தமால் மாவட்ட எஸ்.பி, பிரதீக் சிங் கூறும்போது, ‘’ 8 மாதத்துக்கு முன் மாணவி அவர் கிராமத்துக்குச் சென்றுள்ளார். அப்போது ஒருவர் அவரை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார். பயம் காரணமாகவும் அவமானம் கருதியும் இதை அந்த மாணவி யாரிடமும் தெரிவிக்கவில்லை. இப்போது விசாரணை யில் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்துள்ளோம்’’ என்றார்.

 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close