[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“கை கால்களை வெட்டுவேன்”- காங்., எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு..!

will-chop-your-hands-legs-congress-mla-speech

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் வனத்துறை அதிகாரியின் கை மற்றும் கால்களை வெட்டிவிடுவேன் என மிரட்டல் விடுத்த வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஷிவமோக்கா மாவட்டத்தில் உள்ள பத்ராவதி தொகுதி எம்எல்ஏ சங்கமேஸ்வர். இவர் தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் சிலர் அவர்கள் விரும்பிய பகுதியில் கோயில் கட்ட விரும்பியுள்ளனர். ஆனால் அப்பகுதி வனத்துறைக்கு கீழ் வந்துள்ளது. இதனால் கோயில் கட்ட வனத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள், எம்எல்ஏ சங்கேஸ்வரிடம் இவ்விவகாரத்தை கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வனத்துறை அதிகாரியை எம்எல்ஏ சங்கமேஸ்வர் மிரட்டும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. கிராம மக்கள் உதவியுடன் அப்பகுதியில் கோயில் கட்டும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் எந்த அதிகாரியாலும் இதை தடுக்‌‌க முடியாது என்று வனத்துறை அதிகாரிகளிடம் செல்போனில் எம்எல்ஏ மிரட்டுகிறார். அத்துடன் அதிகாரிகள் யாரேனும் அடிக்கல் நாட்டு விழாவை தடுத்தால் அவர்களின் கை மற்றும் கால்களை வெட்டி விடுவேன் என்றும்‌ ஆக்ரோஷத்துடன்  செல்போனில் பேசுகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close