[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு
  • BREAKING-NEWS சென்னையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது

பொய் கூறினாரா இலங்கை பெண்? வீடியோ வெளியிட்ட கேரள போலீஸ்!

cctv-visuals-confirm-47-year-old-sri-lankan-woman-s-darshan-at-sabarimala

இலங்கையைச் சேர்ந்த 46 வயதான சசிகலா தன் கணவருடன் சென்று நேற்று இரவு 18 படி ஏறி சாமி தரிசனம் செய்துள்ளார். ஆனால் தன்னை தரிசனம் செய்ய போலீசார் அனுமதிக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில், அவர் சாமியை தரிசனம் செய்ததற்கான ஆதார வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்ணான சசிகலாக பல நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி தன் கணவருடன் நேற்று பம்பா வந்துள்ளார். சபரிமலையில் பெரும் பிரச்னைகள் இருப்பதால் கேரள போலீஸாரிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்போடு சன்னிதானம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். ஐயப்பன் கோவிலின் நடை இரவு 11 மணிக்கு சாத்தப்படும், சசிகலாவும் அவரது கணவரும் நேற்று இரவு 10.45 மணிக்கு இருமுடியுடன் பதினெட்டாம்படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். இதனை கேரள போலீஸார் உறுதி செய்துள்ளனர்.

1972 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி சசிகலா பிறந்ததாக பாஸ்போர்ட் விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சசிகலா குடும்பத்தினர் அனைவரும் ஐயப்ப பக்தர்கள் அவரின் கணவர் பல ஆண்டுகளாக தொடர்ந்து சபரிமலைக்கு வந்து சென்றுள்ளார். இதனால் சசிகலா தனக்கு வயதாகிவிட்டதால் சீக்கிரம் சபரிமலை சென்று வந்துவிட வேண்டும் என்ற நோக்கில் இந்தாண்டு தரிசனத்துக்காக ஏற்கெனவே ஆன்லைன் தரிசனத்துக்கு முன்பதிவு செய்து. தன்னுடைய வயது மற்றும் மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்தாக தேவஸம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், சபரிமலையில் தான் சாமி தரிசனம் செய்யவில்லை என்று சசிகலா தெரிவித்துள்ளார். கேரள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சசிகலா "நான் ஒரு ஐயப்ப பக்தை முறையாக 48 நாட்கள் விரதமிருந்து வந்துள்ளேன். நான் என்னுடைய கர்ப்ப பையை மருத்துவ காரணங்களுக்காக எடுத்துவிட்டேன், அதற்கான மருத்துவச் சான்றும் என்னிடம் இருக்கிறது. ஆனாலும் போலீஸாரால் நான் திருப்பி அனுப்பப்பட்டேன். 18 படிகள் மட்டுமே ஏறினேன் சாமி தரிசனம் செய்ய என்னை அனுமதிக்கவில்லை" என்று தெரிவித்தார். ஆனால் குற்றச்சாட்டை மறுத்த போலீஸார் சசிகலா நிச்சயமாக சாமி தரிசனம் செய்திருப்பார் என தெரிவித்தனர்.

இந்நிலையில் சசிகலா சாமி தரிசனம் செய்ததற்கான ஆதாரத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். சிசிடிவி காட்சியில் சசிகலாவும், அவரது கணவரும் சாமி தரிசனம் செய்து திரும்புவது பதிவாகியுள்ளது. தான் சாமி தரிசனம் செய்தபிறகும் ஏன் சசிகலா பொர் கூறினார் என்பது காவல்துறைக்கு தெரியவில்லை. ஏற்கெனவே 50 வயதிற்குட்பட்ட கனகதுர்கா மற்றும் பிந்து ஆகிய இரண்டு பெண்கள் கேரள போலீசார் உதவியுடன் சபரிமலையில் இரு தரிசனம் செய்த நிலையில் தற்போது சசிகலாவும் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

வீடியோ:

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close