[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

“முத்தலாக் பாலின சமத்துவம்; சபரிமலை கலாச்சாரம்” - மோடி விளக்கம்

triple-talaq-matter-of-gender-equality-sabarimala-about-tradition-says-pm-modi

முத்தலாக் என்பது பாலின சமத்துவம் தொடர்புடையது. அதே வேளையில் சபரிமலை விவகாரம் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் தொடர்புடையது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி இன்று பேட்டி அளித்தார். அந்தச் சந்திப்பின் போது உர்ஜித் படேல் ராஜினாமா, துல்லியத்தாக்குதல், எதிர்வரும் தேர்தல் குறித்த கருத்துகள் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பதில் அளித்தார். இந்நிலையில் சபரிமலை மற்றும் முத்தலாக் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

சபரிமலை மற்றும் முத்தலாக் ஆகிய இரண்டு விவகாரங்களுமே மதம் தொடர்புடையதாக இருக்கும் போது முத்தலாக்குக்கு மட்டும் பாஜக ஆதரவு தெரிவிப்பதாகவும், சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பாஜக நிற்பதாகவும் கருத்துகள் கிளம்புகின்றன. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, முத்தலாக் என்பது பாலின சமத்துவம் தொடர்புடையது. அதே வேளையில் சபரிமலை விவகாரம் என்பது ஒரு மதத்தின் கலாச்சாரம் தொடர்புடையது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், இந்த இரண்டு விவகாரங்களும் வெவ்வேறானவை. பல இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் தடை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கூட முத்தலாக்குக்கு தடை உண்டு. அதனால் இது மதம் மற்றும் நம்பிக்கை தொடர்புடையது அல்ல. இது பாலின சமத்துவம் தொடர்புடையது. 

அதே வேளையில் சபரிமலை விவகாரம் வேறு மாதிரியானது. இந்தியாவில் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதே குறிக்கோள். இந்தியாவில் பல கோயில்களில் பல கலாச்சாரங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. சில கோயில்களுக்கு ஆண் போகக்கூடாது. சபரிமலை விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்குள் ஒருவரான பெண் நீதிபதியே அதற்கு எதிர்ப்பாகத்தான் தீர்ப்பு வழங்கியுள்ளார்.  

ஒரு பெண்ணாக அந்த நீதிபதி சில யோசனைகளையும் தீர்ப்பில் கூறி உள்ளார். அவரின் தீர்ப்பை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கட்சிகள் தலையிட ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close