[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

சொன்னது வேறு; உண்மை வேறு - 2018ன் தவறான தகவல்கள்!

the-biggest-lies-of-the-year

2018 ம் ஆண்டு முடிய உள்ள நிலையில் இந்த வருடத்தில் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த தகவல்களும் அதன் உண்மை நிலவரம் குறித்தும் பேக்ட்செக்கர் இணையதளம் தகவலை தொகுத்துள்ளது. அவை,

கடந்த 4 வருடத்தில் 35 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த சிக்கிம்மின் முதல் விமானநிலைய திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி. தனது ஆட்சியில் வருடத்துக்கு 9 விமானநிலையங்கள் வீதம் 4 ஆண்டுகளில் 35 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் 2014 - 2018 இடையிலான 4 வருடத்தில் மொத்தம் ஏழு விமான நிலையங்களே திறக்கப்பட்டுள்ளன. அப்படி பார்த்தால் வருடத்துக்கு 2 விமான நிலையங்கள் வீதமே திறக்கப்பட்டுள்ளன.

ஆதார் மூலம் வருடத்துக்கு ரூ.90000 கோடி சேமிப்பு: அருண்ஜெட்லி

கடந்த செப்டம்பர் மாதம் பேசிய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஆதார் இணைப்பின் மத்திய அரசின் திட்டங்கள் யாருக்கெல்லாம் சென்றடைகிறது என்பதை கண்காணித்ததாலும்,ஆதாரினால் போலிகள் கண்டுபிடிக்கப்பட்டதாலும் அரசுக்கு வருடத்துக்கு ரூ.90000 கோடி லாபம் என்று தெரிவித்தார். ஆனால் அரசு தகவலின்படி ஒட்டுமொத்தமாக கடந்த மார்ச் வரை மட்டுமே ரூ.90000 கோடி வருவாய். வருடத்துக்கு ரூ.90000 கோடி அல்ல.

விவசாயிகளுக்கு ரூ.80ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டது: உ.பி. முதலமைச்சர் யோகி

கடந்த பிப்ரவரி மாதத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி, கடந்த 10 மாதங்களில் உத்திரப்பிரதேச விவசாயிகளுக்கு  நேரடி மானிய திட்டத்தில் ரூ. 80 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  ஆனால் 2017 -18ம் ஆண்டின்படி விவசாயிகளுக்கு ரூ.14540 கோடியை மட்டுமே உ.பி.அரசு கொடுத்துள்ளது. இது முதலமைச்சர் யோகி குறிப்பிட்ட தொகையில் 6ல் ஒரு பங்கு மட்டுமே.

ரூ. 2 லட்சம் கோடியில் ஸ்மார்ட் சிட்டி: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியின் 4 வருட ஆட்சி நிறைவுபெற்றதை அடுத்து நடத்தப்பட்ட விழாவில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும், அதற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். ஆனால் ஸ்மார்ட் சிட்டிக்காக ரூ.48 ஆயிரம் கோடியை மட்டுமே மத்திய அரசு நிர்ணயம் செய்தது. நிர்ணயம் செய்யப்பட்ட தொகையில் 21% மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் 1.8% மட்டுமே பயன்படுத்தப்பட்டது

வேலைவாய்ப்பின்மை, பாலியல் வன்கொடுமை, விவசாயிகள் தற்கொலையில் மத்திய பிரதேசம் முதலிடம்: கமல்நாத்

தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மத்தியப்பிரதேசம் 
வேலைவாய்ப்பின்மை, பாலியல் வன்கொடுமை, விவசாயிகள் தற்கொலையில் இருப்பதாக தெரிவித்தார். ஆனால் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் மத்திய பிரதேசம் 5வது இடத்தில் உள்ளது. அதேபோல் விவசாயிகள் தற்கொலையிலும் கமல்நாத் குறிப்பிட்ட தகவல்கள் தவறாகவே உள்ளன.

குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சியில் கலவரங்கள் நடக்கவில்லை - அமித்ஷா

குஜராத், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கரில் பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒரு கலவரங்கள் கூட நடந்தது இல்லை என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார். 

ஆனால் 1998-2016 ம் ஆண்டுக்குள் குஜராத்தில் 35568 வன்முறைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2003-2016ம் ஆண்டுகளுக்குள் மத்திய பிரதேசத்தில் 32050 வன்முறை சம்பவங்களும், சத்தீஸ்கரில் 12265 வன்முறைச் சம்பவங்களும், உத்திரப்பிரதேசத்தில் 195 வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

சந்தேகத்தின் பேரில் அடித்துகொல்லப்படும் சம்வங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவணப் பணியகத்தில் எந்த தகவலும் இல்லை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர்

மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர், இந்திய அளவில் சந்தேகத்தின் பேரில் அடித்துகொல்லப்படும் சம்வங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவணப் பணியகத்தில் எந்த தகவலும் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் 2014-2018ம் ஆண்டுகளுக்கிடையே 9 மாநிலங்களில் 40 சம்பவங்களில் 45 பேர் அடித்துக்கொல்லப்பட்டதாகவும், 217 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மோடி அரசில் வெடிகுண்டு சம்பவங்கள் அரங்கேறவில்லை: சத்குரு

ஈஷா தொடக்கவிழாவில் பேசிய சத்குரு, ஒரு விஷயத்தில் மட்டும் நாம் பெருமை கொள்ளலாம். பிரதமர் மோடி அரசில் ஒரு வெடிகுண்டு சம்பவங்கள் கூட அரங்கேறவில்லை என்று தெரிவித்தார். ஆனால் அரசு தகவலின்படியே 2016ல் மட்டுமே நூறுக்கும் அதிகமான வெடிகுண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. 4 ஆண்டுகளில் 400கும் அதிகமான வெடிகுண்டு சம்பவங்கள்.

இந்துக்களை விட முஸ்லீம்கள் அதிகரிப்பர்: பிஜேபி பிரமுகர்கள்

இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் சராசரியாக 3 பிள்ளைகளை பெற்றெடுக்கிறார்கள். அப்படியானால் வரும் காலங்களில் இந்தியாவில் இந்துக்களை காட்டிலும் முஸ்லீம்கள் தான் அதிகமாக இருப்பார்கள் என பிஜேபியை சேர்ந்த இணை அமைச்சர் உட்பட சிலர் தெரிவித்தனர்.

ஆனால் புள்ளிவிவரத்தின் படி 2050ல் 18.4 சதவீத்தினர் மட்டுமே முஸ்லீமாக இருப்பார்கள் என்றும், 4ல் 3 பேர் இந்துவாகத்தான் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close