[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

வேட்டையாடியதாக பிரபல கோல்ஃப் வீரர் கைது

golfer-jyoti-randhawa-arrested-on-poaching-charges-in-uttar-pradesh

வனவிலங்குகளை வேட்டையாடியதாக பிரபல கோல்ஃப் வீரர் ஜோதி ரந்தவா மற்றும் துப்பாக்கிசூடு வீரரை உத்தரப்பிரதேச வனத்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லஷ்மிபூர் கேரி மாவட்டத்தில் 1972ஆம் ஆண்டில் பிறந்தவர் ஜோதியேந்தர் சிங் ரந்தவா. ஆனால் இவர் வளர்ந்தது எல்லாம் டெல்லியின் புறநகர் பகுதியான குர்கானில் தான். இவர் 1994ஆம் ஆண்டு கோல்ஃப் விளையாடத் தொடங்கிய பின்னர் ஜோதி ரந்தவா என தனது பெயரை சுருக்கிக்கொண்டார். அதே ஆண்டில் நடந்த ஆசிய கோல்ஃப் தொடரை இவர் வென்றார். 2004ஆம் ஆண்டு ஐரோப்பிய தொடரில் ஜான்னி வால்கருடனான போட்டியை சமன் செய்து இரண்டாம் இடம் பிடித்தார். உலகின் டாப் 100 கோல்ஃப் வீரர்கள் பட்டியலில் 200-2009 ஆகிய காலகட்டங்களில் இடம்பிடித்தவர். 

நடிகை சித்ராங்கதாவை திருமணம் செய்து கொண்ட இவர், 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். பின்னர் தனது உத்தரப் பிரதேசத்தில் இருந்த தனது தந்தையின் பண்ணை வீட்டில் தனது நேரத்தை செலவிட்டு வந்தார். அந்தப் பகுதி விவசாய நிலங்கள், வனப்பகுதி நிறைந்த இடமாக உள்ளது. அங்கு மனிதர்களை அச்சுறுத்தும் விலங்குகளின் நடமட்டாம் அதிகம் உள்ளது.

இந்நிலையில் ஜோதி ரந்தவா தனது நண்பரும், துப்பாக்கிச்சூடு தேசிய வீரருமான மகேஷ் விராஜ்தருடன் வேட்டையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உத்தரப் பிரதேச வனத்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close