[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து

17 வயது சிறுவனுடன் திருமணம்: இளம் ’அம்மா’ போக்சோவில் கைது!

woman-marries-17-year-old-held-under-pocso-act

17 வயது சிறுவனை திருமணம் செய்ததாக 22 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தனது 17 வயது மகனை 22 வயது பெண் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் கவர்ந்து சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து அவரது பெற்றோருடன் என் வீட்டுக்கு வந்தார். என் மகனை திருமணம் செய்துகொண்டதாகவும் இங்குதான் தங்கப் போகிறேன் என்றும் சொன்னார். இதற்கு நானும் என் கணவரும் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

எதிர்ப்பு தெரிவித்தால் என்னைக் காயபப்டுத்திக் கொள்வேன் என்று மிரட்டினார். பின்னர் அன்று இரவு வீட்டை வெளியேறிவிட்டார். என் மகனும் அவளின் பின் சென்றுவிட்டார். என் மகனின் மனதை மாற்றி விட்டார். அவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. என் மகனும் அந்தப் பெண்ணும் இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர்.

‘என்னை சந்திக்க வரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியே என் மகனை அவர் வலையில் வீழ்த்தியுள்ளார். என் மகனை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

இது வழக்கை விசாரித்த போலீசார், அந்த பெண்ணிடம் கேட்டபோது, ‘விருப்பத்தின் பேரிலேயே எங்கள் திருமணம் நடந்தது. எங்களுக்கு இப்போது ஐந்தரை மாதத்தில் குழந்தை ஒன்று இருக்கிறது’ என்றார். 

பின்னர் போலீசார் அந்தப் பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பைகுல்லா சிறையில் அடைத்தனர். குழந்தை தன்னுடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார் அந்த பெண். அதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த இளம் அம்மா, இப்போது ஜாமின் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close