[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது
  • BREAKING-NEWS 2020 ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா பங்கேற்க தடை விதித்தது உலக ஊக்க மருந்து தடுப்பு முகமை

ரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..! பரிதவிக்கும் தாய்..!

20-month-old-hit-be-pellet-in-kashmir

காஷ்மீரில் ரப்பர் குண்டால் தாக்கப்பட்ட 20 மாத குழந்தை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தையின் இடது கண் பார்வை திரும்ப கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை பாதுகாப்பு ஊழியர்களால் ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. அப்போது பொதுமக்களை கலைக்க பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு உள்ளிட்டவற்றை வீசியுள்ளனர். அத்துடன் ரப்பர் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதில் பாதுகாப்பு ஊழியர்களின் ரப்பர் குண்டுக்கு 20 மாத பெண் குழந்தை ஒன்று பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மருத்துவமனையில் அக்குழந்தை சிகிச்சை பெற்று வரும் நிலையில் குழந்தையின் இடது கண் பார்வைக்கு உத்தரவாதம் இல்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து 20 மாத குழந்தையின் அம்மாவான மார்சலா ஜான் கூறும்போது, “ கடந்த ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல நான் எனது இரண்டு குழந்தையுடன் எங்கள் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் வெளியே மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எங்கள் வீட்டிற்கு வெளியே கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது. அதனால் என் 5 வயது மகன் மூச்சு விட முடியாமல் மிகவும் சிரமப்பட்டான். என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு செல்லலாம் என முடிவு செய்தேன். இதற்காக வீட்டின் கதவுகளை திறந்தேன். அப்போது வெளியே 3 பாதுகாப்பு ஊழியர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மின்னல் வேகத்தில் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். என் குழந்தையை காப்பாற்ற முடிவு செய்து அவளின் முகத்தை மூடிப் பார்த்தேன். இருப்பினும் என் குழந்தை மீது ரப்பர் குண்டு விழுந்தது. அத்துடன் எனக்கும் காயம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம். எங்கள் மகன் வீட்டில்தான் இருக்கிறான். அவனுக்கு என்ன ஆனதோ என்று தெரியவில்லை. அவன் உடம்பையும் யாராவது பாருங்கள். அவனுக்கும் ஏதாவது காயம் இருக்கிறதா என்று..?

என் 20 மாத குழந்தை தற்போது அவ்வளவு நல்ல நிலையில் இல்லை. காயம் பயங்கரமாக இருக்கிறது என்றும் அவளின் ஒரு பார்வை பறிபோகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் என் குழந்தையின் தவறு என்ன..?  அவளுக்கு என்ன நடந்தது என்பதை புரியும் வயதில் அவள் இல்லை. தொடர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். குழந்தையின் இந்த நிலைமைக்கு யார் காரணமோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவள் எந்தவொரு இக்கட்டான தருணத்தை ஒவ்வொரு நொடியும் கடந்து வருகிறாள் என்பதை ஒரு தாயாக என்னால் மட்டும் தான் உணர முடியும்” என வேதனையுடன் கூறியுள்ளார்.

Courtesy: The Indian Express

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close