[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

"சொராபுதீன் கொலைக்கு அமித் ஷாவுக்கு தவணையில் பணம்" சிபிஐ அதிகாரி தகவல்

amit-shah-among-main-conspirators-in-sohrabuddin-fake-encounters-chief-investigating-officer-tells-cbi-court

குஜராத் காவல்துறையால் 2005 ஆம் ஆண்டு எண்கவுன்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் சொராபுதீன் ஷேக். இந்த
கொலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு பண ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார் என
முன்னாள் சிபிஐ அதிகாரி அமிதாப் தாக்கூர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

குஜராத் மாநில அரசில் உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தார். அப்போது, அந்த மாநிலத்தைச் சேர்ந்த சொராபுதீன் ஷேக்
என்பவருக்குத் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு அரசியல் தலைவர்களை கொல்லத் திட்டமிட்டுள்ளார்
என்று கூறி அவரை குஜராத் தீவிரவாத தடுப்பு போலீஸார் கைது செய்தனர். ஆனால், கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 26-ம்
தேதி என்கவுண்ட்டரில் சொராபுதீன் ஷேக்கை சுட்டுக்கொன்றனர். அடுத்த சில நாட்களில் சொராபுதீன் ஷேக் மனைவி கவுசரும்
என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். 

இதனையடுத்து சொராபுதீன் ஷேக்கின் உதவியாளர் துளசி பிரஜாபதியையும் குஜராத், ராஜஸ்தான் போலீஸார் சேர்ந்து கடந்த
2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சுட்டுக்கொன்றனர். ஆனால் இது ஒரு போலீயான எண்கவுன்ட்டர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட
எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் இந்த 3 கொலைகளிலும் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு
தொடர்பு இருந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதையடுத்து 2010 ஆம் ஆண்டில் அமித் ஷாவை சிபிஐ கைது செய்தது.
ஆனால், 3 மாதத்தில் இவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமித்ஷா மீது குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. இந்த
வழக்கு 2010ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றப்பட்டது, அதன்பின் 2014 ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் அமித் ஷா வை விடுவித்தது.
இந்நிலையில், மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்து வந்தது. நீதிபதி எஸ்.ஜே. சர்மா முன்னிலையில்
சொராபுதீன் ஷேக் வழக்கை விசாரணை செய்த தலைமை விசாரணை அதிகாரி அமிதாப் தாக்கூர் விரிவான அறிக்கையை
தாக்கல் செய்தார். 

அதில் " குஜராத் போலீஸாரால் கடந்த 2005-ம் ஆண்டு எண்கவுன்ட்டர் செய்யப்பட்ட சொராபுதீன் ஷேக் கொலையில் பாஜக
தலைவர் அமித் ஷா, பண ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆதாயம் அடைந்தார். அகமதாபாத்தின் பிரபலமான படேல்
சகோதரர்களிடம் இருந்து அமித் ஷாவுக்கு ரூபாய் 70 லட்சம் கொடுக்கப்பட்டது. தீவிரவாத தடுப்புப்பரிவு டிஐஜி வன்சாராவுக்கும்
ரூ.60 லட்சத்தை படேல் சகோதரர்கள் அளித்தனர். இந்தக் கொலையில் அமித் ஷா தவிர்த்து, தீவிரவாத தடுப்புப் பிரிவு டிஐஜி
டி.ஜி.வன்ஜாரா, உதய்பூர் முன்னாள் எஸ்.பி. தினேஷ் எம்.என்., அகமதாபாத் முன்னாள் போலீஸ் எஸ்.பி. ராஜ்குமார் பாண்டியன்,
அகமதாபாத் முன்னாள் போலீஸ்துணை ஆணையர் அபய் சுதாஸமா ஆகியோரும் அரசியல் ரீதியாக ஆதாயம் அடைந்தனர்."

மேலும், "சொராபுதீன் ஷேக் என்கவுண்டரில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் அரசியல்ரீதியாக அல்லது பண ரீதியாக
ஆதாயம் அடைந்தது தொடர்பான எந்தவிதமான விசாரணையையும் எதிர்கொள்ளவில்லை. வன்சாரா, பாண்டியன்,
தினேஷ்,சுதாஸ்மா ஆகியோர் உத்தரவுப்படிதான் குற்றம்சாட்டப்பட்ட 20 அதிகாரிகளும் செயல்பட்டனர். சொராபுதீன் ஷேக்
உடலில் இருந்து 92 கரன்சி நோட்டுகள் எடுக்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. அது குறித்து விசாரணையும் நடக்கவில்லை"
எனத் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் சொராபுதீன் கொலை
தொடர்பான தகவல்கள் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் "சொராபுதீன் மற்றும் அவரது
மனைவி கொல்லப்படும்போதும் அமித் ஷாவும் வன்சாராவும் தொலைபேசியில் அவ்வப்போது தொடர்புகொண்டு பேசியுள்ளனர்.
என்கவுன்டரில் ஈடுபட்டவர்களுடனும் பேசியுள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close