[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

நீதிபதியின் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்..! மார்கெட்டிற்கு சென்றபோது விபரீதம்

wife-son-of-judge-shot-dead-by-his-guard

நீதிபதியின் மனைவியை அவரது பாதுகாவலரே சுட்டுக்கொன்ற சம்பவம் ஹரியானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ள நீதிபதியின் மகனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹரியானா மாநிலம் குர்கான் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி கிருஷ்ணன் காந்த் ஷர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ். நீதிபதி கிருஷ்ணனின் பாதுகாப்பு அதிகாரியாக மஹிபால் சிங் என்பவர் கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே ரீத்து மற்றும் துருவ் நேற்று மளிகை சாமான்கள் வாங்க மார்க்கெட்டிற்கு சென்றிருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பிற்காக மஹிபால் சிங் சென்றிருக்கிறார். அனைத்து பொருட்களையும் வாங்கிய பின் வீடு திரும்பியபோது யாரும் எதிர்பாராதவிதமாக மஹிபால் சிங், ரீத்துவை தான் கொண்டுவந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார். பின்னர் 18 வயது இளைஞர் துருவையும் சுட்டுள்ளார் மஹிபால். இதில் பலத்த காயமடைந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். பின்னர் மஹிபால் சிங் கார் மூலம் தப்பிச் சென்றுவிட்டார்.

இதனிடையே சம்பவம் அறிந்த காவல்துறையினர் மஹிபால் சிங்கை கைது செய்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரீத்து இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துருவின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நீதிபதி குடும்பத்தினர் கொடுத்த துன்புறுத்தல் காரணமாக அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டதாக போலீசாரிடம் மஹிபால் சிங் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மஹிபால் சிங்கின் மனைவி ஆசிரியர் ஆவார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close