[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்

பார்வை இல்லாதோருக்கு பார்வை கொடுத்த வெங்கடசாமி ! பெருமைபடுத்திய கூகுள்

google-doodle-celebrates-dr-govindappa-venkataswamy-s-100th-birthday

பிரபல தேடுப்பொறி நிறுவனமான கூகுள்,  டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமி பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறது. இதை சிறப்பிக்கும் விதமாக கூகுள் தளத்தின் இன்றைய டூடுல் பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

Read Also -> சிவாஜி கணேசன் யார் ?

தானத்தில் சிறந்த தானம் கண்தானம் என்பார்கள் பலர். இவ்வுலகின் அழகை ரசிக்க முடியாமல் பார்வையில்லா மாற்றுத் திறனாளிகளாக பலர் இருக்கின்றனர். இதுபோன்ற பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு கண் பார்வை கொடுத்து வாழ்வில் ஒளி ஏற்றியவர் மறைந்த டாக்டர் கோவிந்தப்பா வெங்கடசாமி. அத்தகைய பெருமை மிக டாக்டரை தனது 100 ஆவது பிறந்தநாளில் கெளரவுப்படுத்தியுள்ளது கூகுல் டூடுல். 

Read Also -> வேறு மத இளைஞருடன் பேசியதால் பெண்ணிடம் அத்துமீறிய காவலர்கள்.. இதுதான் நடவடிக்கையா..?  

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள அயன்வடமலாபுரம் என்ற ஊரில் 1918ம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெங்கடசாமி பிறந்தார். ஆரம்பக் கல்வியை எட்டையபுரத்தில் முடித்த பின், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் பெற்று, மேல்படிப்பை தொடர்ந்த அவர் இந்திய ராணுவத்தில் ராணுவ மருத்துவராக சேர்ந்து போரில் காயம்பட்ட வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

சிங்கப்பூர், மலேஷியா ஆகிய நாடுகளில் யுத்த களங்களில் மருத்துவப் பணியாற்றிய வெங்கடசாமி தீராத சரும நோய்களுக்கு ஆளானார். பின் வெங்கடசாமி ராணுவப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். ராணுவத்தில் சிறப்பாக சேவை செய்த வெங்கடசாமி கண் மருத்துவத்தில் முதுநிலைப் (எம்.எஸ்) பட்டம் பெற்று 1956ஆம் ஆண்டு மதுரை அரசு மருத்துவமனையில் கண் மருத்துவத் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றினார்.

Read Also -> திவாரியின் குடும்பத்தினருடன் யோகி ஆதித்யநாத் சந்திப்பு.. ரூ.25 லட்சம் இழப்பீடு

இவரின் உண்ணதமான சேவையை கவுரவிக்கும் வகையில் 1973ஆம் ஆண்டு மருத்துவ துறையின் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. 1976 இல் ஓய்வுக்குப் பின் “அரவிந்த் கண் மருத்துவமனை” என்ற பெயரில் மருத்துவமனையை தொடங்கி கண் மருத்துவ துறையில் வெங்கடசாமி அளப்பரிய சாதனைகள் செய்து வந்தார். சர்வதேச ஹெலன் கெல்லர், பி. சி. ராய் உள்ளிட்ட விருதுகளுக்கு சொந்தக்காரான இவர் 2006 ஆம் ஆண்டு காலமானார்.

Read Also -> தூய்மை இந்தியாவின் நிஜ முகம் இவர்களே !

ஜி.வெங்கடசாமியால் தொடங்கிய “அரவிந்த் கண் மருத்துவமனை” தமிழகம் முழுவதும் முகாம்களை நடத்தி கண்பார்வைக் குறைபாடு உடையவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை இன்றும் அளித்து வருகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close