[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண்களுக்கு மட்டும்தான் தண்டனையா..? இன்று தீர்ப்பு

supreme-court-verdict-likely-today-on-petition-challenging-adultery-law

திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண்களுக்கு மட்டுமே தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.

திருமணமான பெண்ணும், திருமணமான வேறொரு ஆணும் பாலியல் உறவு வைத்திருந்தால், ஆணை மட்டுமே தண்டிக்க சட்டப்பிரிவு 497 வழி செய்கிறது. இந்தச் சட்டத்தில் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.

விசாரணையின் போது இந்த சட்டப்பிரிவு பெண்களுக்கு ஆதரவான நிலைப்பாடை கொண்டிருப்பது போல் தோற்றமளித்தாலும், ஆணாதிக்க நிலைக்கே வழி வகுப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close