[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பாக தேவசம் போர்டு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்

பாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை!

bishop-franco-s-grilling-to-continue-today

கேரளாவில் பாலியல் புகாருக்குள்ளான பிஷப் பிராங்கோவிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இன்றும் விசாரணை தொடர்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கல் என்பவர் பிஷப். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது. புகார் கொடுத்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும் போலீசார் அவரை கைது செய்யாததை கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். ஆனால், தம் மீது வீண் பழி போடப்படுவதாக பேராயர் பிராங்கோ கூறி வருகிறார். இந்த விவகாரம் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Read Also -> தேசத்திற்காக கடினமான முடிவுகள் எடுக்க அரசு தயங்காது - பிரதமர் மோடி

    

Read Also -> பாலியல் புகாருக்குள்ளான பிஷப்பிடம் 8 மணி நேரம் விசாரணை!

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கை சந்திக்க நேரம் செலவிட வேண்டியுள்ளதால் தம்மை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். 

கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கடிதம் எழுதப்பட்ட நிலையில், பேராயர் பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் அவரை தற்காலிக நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் கேரள சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணை இன்றும் தொடர்கிறது. விசாரணையில் பெறப்பட்ட விவரங்களை இப்போது தெரிவிக்க முடியாது என்று கோட்டயம் எஸ்.பி. ஹரிசங்கர் தெரிவித்துள்ளார். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close