[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

கார் விபத்தில் மீன் விற்ற மாணவி படுகாயம்: எலும்பு முறிவு!

fish-selling-college-student-hanan-hameed-injured-in-accident

கேரளாவில் மீன் விற்று, கல்லுாரியில் படித்து வந்த, ஹனன் ஹமீது என்ற மாணவி, சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். 

கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஹனன் ஹமீது. இவர், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஹனன், குடும்பத்தை காப்பாற்றவும் படிப்பு செலவுகளை சமாளிக்கவும் கல்லுாரி முடிந்த பின் மீன் விற்பனை செய்து வந்தார். இவர் பற்றி மலையாள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

இருந்தாலும் தன்னை பிரபலப் படுத்துவதற்காக, திட்டமிட்டு இதை செய்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது. அவரை அவதூறாக விமர்சித்த வர்கள் கைது செய்ய ப்பட்டனர். இந்நிலையில் அவருக்கு உதவும் பொருட்டு சினிமாவில் நடிக்க சில இயக்குனர்கள்  வாய்ப்புகள் அளித்தனர். பொதுநிகழ்ச்சிகளில், சிறப்பு விருந் தினராகவும் அவர் அழைக்கப்படுகிறார். 

இந்நிலையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகராவில் கடை திறப்பு நிகழ்ச்சியில், நேற்று காலை பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து காரில் திருச்சூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். காலை, 11:00 மணியளவில் கொச்சி அருகே உள்ள கொடுங்கல்லுார் என்ற இடத்தில் வந்த போது கார், சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஹனன் படுகாயம் அடைந்தார். உடனடியாக, கொடுங் காநல்லூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, முதுகு தண்டில்  முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில வாரங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close