[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

மல்லையாவை அனுப்ப முடியாது: இந்தியா கோரிக்கையை மறுத்த பிரிட்டன்

mallya-issue-britain-has-refused-for-india-s-request

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, உடனடியாக இந்தியாக்கு திருப்பி அனுப்ப இயலாது என பிரிட்டன் அரசு கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் வங்கிகளிடம் பல கோடி ரூபாய் கடன்பாக்கி மற்றும், அதைத்‌ தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டில், மதுபானத் தொழிலதிபர் விஜய் மல்லையா அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளார். அவரது பாஸ்போர்ட்டும் ‌ரத்து செய்யப்பட்டுள்ளது. மல்லையா தற்போது லண்டனில் வசித்து வருகிறார். எனவே, அவரை இந்தியாவுக்குத் திருப்பி ‌அனுப்ப வேண்டும் என, மத்திய அரசு, பிரிட்டனுக்கு கோரிக்கை வைத்திருந்தது.

அந்நாட்டின் 1971 குடியமர்வுச் சட்டப்படி, அங்கு வசிக்கும் ஒரு நபருக்கு முறையான பாஸ்போர்ட் தேவையில்லை என்ற விதி இருப்பதாகவும், அதனால், விஜய் மல்லையாவை உடனே திருப்பி அனுப்ப இயலாது எனவும்,‌ பிரிட்டன் அரசு தெரிவித்திருப்பதாக ஆங்கில நாளேடான பிஸினஸ் ஸ்டாண்ட்ர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு, இந்தியாவும், பிரிட்டனும், 1993ம் ஆண்டு செய்து கொண்ட ‌பரஸ்பர ஒப்பந்தப்படி, கோரிக்கை வைத்தால், மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலும் எனவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பதாக இந்த நாளேட்டு செய்தி தெரிவிக்கிறது. அதனால், விஜய் மல்லையா இந்திய திருப்புவது தாமதமாகும் என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close