[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

உறவினர் கண்முன்னே நடந்த கொடூர விபத்து: பதறவைக்கும் சிசிடிவி வீடியோ!

maharastra-bike-crushed-under-bus-cctv-footage-released

மகாராஷ்ட்ராவில் கனமழையின் போது பேருந்தில் இருசக்கர வாகனம் சிக்கிய விபத்தால் பெண் ஒருவர் உயிரிழந்தார். 

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவின் கல்யாண் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வந்தவர் மனிஷா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை சிவாஜி சவுக் என்ற இடத்தில், தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது கனமழை பெய்து கொண்டிருந்தது. சாலை முழுவதும் வெள்ளக்காடாக நீர் நிரம்பி இருந்தது. அவர்கள் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவர்களுக்கு அருகிலேயே பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது சாலையில் இருந்த பள்ளம் ஒன்றில் இறங்கி, ஏற இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் ப்ரேக் அடித்தார். உடனே இருசக்கர வாகனம் சறுக்கி பேருந்தில் அடியில் சென்றது. இந்த விபத்தில் மனிஷா பேருந்தின் பின்புற சக்கரத்தில் சிக்கினார். பேருந்து நிற்காமல் அவரை கொஞ்ச தூரம் இழுத்துக் கொண்டே சென்றது. அதில் சிதைந்த மனிஷா, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி, வைரலாக பரவி வருகிறது. 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close