[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

‘காந்தி கோயிலுக்கு பின்னால்...’ - இதற்காகத்தான் கடவுள் ஆனாரா மகாத்மா?

a-temple-for-the-mahatma-this-telangana-village-has-a-god-gandhi

தெலுங்கானா மாநிலத்தில் காந்திக்காக அமைக்கப்பட்டுள்ள கோயில் குறித்து புதிய சர்ச்சைகள் எழுந்துள்ளன.

நாள்கொண்டா மாவட்டத்தில் உள்ள சித்யாள் கிராமத்தில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தூரத்தில் இந்த கிராமம் உள்ளது. ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. உள்ளே காந்தியின் சிலை அமர்ந்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி கோயில் என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. 

இந்தக் கோயில் மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை 2015ம் ஆண்டு மின்சாரத் துறை அமைச்சர் ஜெகதிஷ்வர் ரெட்டி என்பவர் துவக்கி வைத்தார். காந்தியை கடவுளைப் போல் வழிபடும் தளமாக இது உள்ளது. இந்து கோயிலைப் போல் இந்தக் கோயில் கட்டப்பட்டிருந்தாலும், மூன்று முக்கிய மதங்களின் பிரசங்கங்கள் உள்ளே பொறிக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலில் உண்டியல் கிடையாது. இருப்பினும், பூஜைகளுக்கு என்று தனியாக வசூல் செய்யப்படுகிறது. 

ஐதராபாத்-விஜயவாடா தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இரண்டு தளங்களாக இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கீழ் தளத்தில் தியான அறை உள்ளது. இங்கு ஒரு காந்தியின் சிலை உள்ளது. முதல் தளத்தில் காந்தியின் போதனைகள் போதிக்கப்படுகிறது. இங்கொரு காந்தி சிலை உள்ளது. இந்த கோயில் பக்தர்களுக்காக காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறக்கப்பட்டிருக்கும். இரண்டு கோயில் குருக்கள் சிலைக்கு பூஜை செய்து வருகிறார்கள். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறும். 

                                             

ஒருபுறம் இந்தக் கோயில் மிகவும் பிரபலமடைந்து வரும் நிலையில், திக்யாள் பகுதி மக்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறார்கள். அரசு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த கோயில் அரசியல்வாதிகளால் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதாக பலரும் கூறுகின்றனர். திக்யாள் பகுதியைச் சேர்ந்த மல்லேஷ் யாதவ் கூறுகையில், “இந்தக் கோயில் அரசாங்கத்தின் 4.5 ஏக்கர் நிலத்தில் உள்ளது. அடிக்கடி கோயில் மூடப்படுகிறது. பூஜை செய்வதற்கு குருக்கள் இருப்பது இல்லை. இந்தக் கோயிலானது அரசியல்வாதிகள் மற்றும் உள்ளூர் தலைவர்களும் வரும்போது மட்டுமே மக்களால் நிரம்பி வழிகிறது. தேசிய நெடுஞ்சாலை 65-க்கு அருகில் உள்ள நிலத்தை அரசியல்வாதிகள் அபகரித்து இருக்கிறார்கள்” என்றார். 

இது ஒரு புறம் இருக்க, கோயில் கட்டப்பட்ட பிறகு விபத்துக்கள் குறைந்துவிட்டதாக ஒரு செய்தி பரவி வருகிறது. இந்தக் கோயில் கட்டுவதற்கு முன்பு அந்தப் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கள் அதிக அரங்கேறி வந்தன. ஓராண்டிற்கு 150 பேர் விபத்தில் இறந்தனர். ஆனால், காந்தியின் கோயில் கட்டப்பட்ட பிறகு விபத்துக்கள் 90 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

courtesy - The News Minute

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close