[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

விதவிதமான செல்ஃபி எடுக்க நினைத்த போலீஸுக்கு கிடைத்த தண்டனை

police-arrested-for-taking-selfie-in-judge-seat

நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து செல்ஃபி எடுத்த போலீசார் கைது செய்யப்பட்டார்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர் ராம் அவதார் ராவத். இவர் போலீஸ் பயிற்சியில் உள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று உமரியாவில் உள்ள நீதிமன்றத்தில் தலைமை நீதிமன்ற நீதிபதி கே.பி.சிங்கின் இருக்கை காலியாக இருந்திருக்கிறது. அப்போது அந்த வழியாக சென்ற ராம் அதனை கண்டிருக்கிறார். எனவே நீதிபதியின் இருக்கையில் அமர்ந்து செல்ஃபி எடுக்க ராமுக்கு ஆசை வந்திருக்கிறது. அந்த நேரத்தில் யாரும் அங்கு இல்லை என தெரிகிறது.

உடனடியாக நீதிபதியின் அறைக்கு சென்ற ராம், அங்கு நீதிபதியின் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டு விதவிதமாக செல்ஃபி எடுத்தார். அந்த நேரத்தில் உள்ளே வந்த நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர், யாரோ நீதிபதியின் இருக்கையில் இருக்கிறார்களே என்பதை கவனித்திருக்கிறார். பின்னர் இந்த விஷயத்தை அலுவலக உதவியாளர், போலீசாருக்கு தெரிவித்திருக்கிறார். அதன்படி ராமை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும்போது ராம் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. ராம் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close