[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்

துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 2 நாட்கள் தர்ணா

arvind-kejriwal-to-spend-second-night-at-lt-governor-s-house

டெல்லியில் துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இரண்டு நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகளின் தொடர் போராட்டத்தை நிறுத்த வேண்டும், நியாயவிலைக் கடைப் பொருட்களை வீடுகளுக்கே சென்று விநியோகிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கைகளுக்காக 3 அமைச்சர்களுடன் சேர்ந்து கடந்த 11ம் தேதி துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் சந்தித்தார். அப்போது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. இதையடுத்து அலுவலகத்தின் வரவேற்பு அறையிலேயே அமைச்சர்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். வரவேற்பறையிலேயே தூங்கி, அங்கிருக்கும் கழிவறையையே அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று முழுவதும் முதலமைச்சரும், அமைச்சர்களும் அங்கேயே இருந்துள்ளனர். ஆனால் துணை நிலை ஆளுநர் அவர்களை சந்திக்கவில்லை. பெரும்பாலான மக்களின் ஆதரவுடன் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட ஒருவர், அரசுப் பிரதிநிதியின் அலுவலகத்தில் 2 நாட்களாக தர்ணா போராட்டம் நடத்துவது இதுவே முதல்முறை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close