[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் 68 பேர் கைது- தூத்துக்குடி காவல்துறை
  • BREAKING-NEWS வடகொரியாவுடன் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து - அமெரிக்கா
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட வாய்ப்பு இல்லை; அரசின் எண்ணமும் அதுதான் - ஆட்சியர் சந்தீப் நந்தூரி
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து பெங்களூருவில் உள்ள வேதாந்தா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்
  • BREAKING-NEWS அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம்- ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் அனில் அகர்வால்
  • BREAKING-NEWS தூத்துக்குடி அண்ணாநகரில் ஆயுதம் ஏந்திய 100க்கும் மேற்பட்ட கமாண்டோ படை வீரர்கள், 500க்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுப்பு
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் பிரேத பரிசோதனை அறிக்கையை மே 30ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

தமிழக‘நீட்’மாணவர்களுக்கு உதவ தனி தொலைபேசி எண்: கேரள முதல்வர் 

ready-to-help-tamil-nadu-students-who-write-neet-exam-in-kerala-pinarayi-vijayan

நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உதவ ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் உதவி மையம் அமைக்க மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் அலுவலக ட்விட்டர் பதிவில், வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல்வேறு மாணவர்கள் நீட் தேர்வு எழுத கேரளா வர இருப்பதால், அவர்களுக்கு போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகள் சிறப்பாக இருக்கத் தேவையான வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் உதவி தேவைப்பட்டால் 9061518888 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், எர்ணாகுளத்தைப் பொறுத்தவரையில் 58 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் 5ஆயிரம் மாணவர்கள் உள்பட 33 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்களில் பல்வேறு குறைகள் பட்டியலிடப்படுவதாகவும், ஒருவேளை பிரச்னைகள் இருந்தால் cmo.kerala.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிவிக்கலாம் என்றும் கேரள முதலமைச்சரின் அலுவலக ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close