[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

காவிரியில் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் ஏன் அமைக்கலாம்..?

reason-behind-bhakra-board-control

சிந்துவின் மிக நீண்ட கிளை நதி சட்லெஜ். சீனம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள், ஜம்மு -காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேஷ், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் வழியாகப் பாய்ந்து செல்கிறது. பஞ்சாபின் ஐந்து நதிகளில் (இதில் மூன்றுதான் நம்மிடம் இருக்கிறது. மற்ற இரண்டு பாகிஸ்தானில்) இதுதான் நீளமானது . இதன் ஒரு கிளை நதி பியாஸ்.

இதில் பக்ரா என்னும் இடத்தில்  அணைகட்டும் முயற்சிகள் பஞ்சாப் கவர்னராக இருந்த சர் லூயி டானே என்ற வெள்ளைக்காரரால் தொடங்கப்பட்டது. 1944ல் அன்றைய பஞ்சாப் வருவாய்த்துறை அமைச்சரும், பிலாஸ்பூர் அரசரும் ஒப்பந்தம் செய்து கொள்ள பூர்வாங்கப் பணிகள் தொடங்கின.சுதந்திரம் அடைந்த பின்னர் நேரு முயற்சிகளை முன்னெடுக்க 1948ல் தொடங்கி 1963ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பெரிய அணைகளில் இது ஒன்று.

இதன் கிளை நதியான பியாசில் கட்டப்பட்ட அணை நங்கல். பொதுவாக பக்ரா நங்கல் என்று சொன்னாலும் அவை இரண்டு அணைகள்.

1966ல் பஞ்சாப்பை பிரித்து ஹரியானா உருவாக்கபட்டபோது (சில பகுதிகள் ஹிமாசல் பிரதேஷுக்கும் சென்றன) பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) அமைக்கப்பட்டது.  பக்ரா மற்றும் பியாசில் உள்ள அணைகளை நிர்வகித்து வரும் இந்த அமைப்பு அவற்றிலிருந்து  பஞ்சாப், ஹரியானா, ஹிமாசல் பிரதேஷ், ராஜஸ்தான், மாநிலங்கள்,  தில்லி, சண்டிகர் ஆகிய பகுதிகளுக்கு அளிக்கப்படும் நீர் மற்றும் மின்சாரம் இவற்றை நெறிப்படுத்தி வருகிறது.

ஒரு தலைவர், இரு உறுப்பினர்களை முழு நேரப் பணியாளர்களாகவும்  மத்திய அரசின் இரு உறுப்பினர்கள், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாசல் மாநிலங்களிலிருந்து தலா ஒரு உறுப்பினர்களையும் இதன் நிர்வாகம் (Board) கொண்டிருக்கிறது.

இந்தியப் பிரிவினையின் போது மேற்குப் பஞ்சாபில் உள்ள பெரும்பகுதி விளை நிலங்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டன. மிஞ்சிய நிலங்களைக் கொண்டு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தானை வட இந்தியாவின் கோதுமைக் களஞசியமாக மாற்றியதில் இதற்கு முக்கியப் பங்குண்டு.

சுமார் 135 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு நீர் அளிக்கிறது இந்த மேலாண்மை வாரியம்.

கட்டுரை : மாலன், மூத்த பத்திரிகையாளர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close