[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

சும்மா ஸ்கூல் ஃபீஸ் ஏத்தக் கூடாது ! உ.பி.யில் புதிய சட்டம்

up-private-schools-won-t-increase-school-fee-more-than-7-an-year-as-per-yogi-cabinet-s-new-rule

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள் அடிக்கடி ஸ்கூல் ஃபீஸை ஏற்றுவதாக பெற்றோர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. எனவே இதனை தடுக்கும் விதத்தில் புதிய சட்டத்தை ஏற்ற அம்மாநிலத்தை ஆளும் பாஜக அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக தனியார் பள்ளிக் கட்டணம் ஒழுங்குமுறை சட்டம் என பெயரில் புதிய சட்டத்தை இயற்றுவதற்கான ஆலோசனை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்றுள்ளது. 

இந்தப் புதிய சட்டத்தின்படி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தனியார் பள்ளிகள் 7 சதவிதம் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள முடியும். இந்தச் சட்டம் ஆண்டுக்கு ரூ 20,000 முதல் கட்டணமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தும் என்று உத்தரப்பிரதேசம் மாநிலம் துணை முதல்வர் தினேஷ் சர்மா தெரிவித்துள்ளார். இந்தச் சட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகள் லட்சக் கணக்கில் நன்கொடை வசூலிப்படும் தடுக்கப்படும். அப்படி வசூல் செய்தால் அந்த தனியார் பள்ளிகளின் அங்கீகாரமும் ரத்தாகும் வகையில் புதியச் சட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close