[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி

ஏர்டெல் சேவையிலும் வந்தது பிரச்னை

airtel-is-down-in-chennai

நாடு முழுவதும் ஏர்டெல் சேவை சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஏர்செல் நெட்வொர்க்கை தொடர்ந்து ஏர்டெல்லிலும் தற்போது பிரச்னை கிளம்பியுள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் சேவை சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அழைப்பு கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இண்டர்நெட் கிடைக்கிறது என்றும் கால் செல்லவில்லை என புகார் கூறுகின்றனர். முதலில் இப்பிரச்னை வடஇந்திய ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இருந்த நிலையில் தற்போது தென்னிந்தியாவிலும் தொடர்கிறது. 4ஜி சிம்மில் 2ஜி சேவை தான் கிடைக்கிறது என இணையவாசிகள் பொங்குகின்றனர். இன்கம்மிங் மட்டும் அவுட்கோயிங் செல்வதில் பிரச்னை இருப்பதாக கூறுகின்றனர். பல்வேறு இடங்களில் சிக்னல் கட் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. 

இதுதொடர்பாக ஏர்டெல் ட்விட்டரில், தொழில்நுட்ப சிக்கல் இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு சென்னை உட்பட சில இடங்களில் நெட்வொர்க் சேவைகளை வழங்க முடியவில்லை. இந்தச் சேவைகள் முழுமையாக மீட்டமைக்கப்பட்டு இப்போது சாதாரணமாக இயங்குகின்றன. சிரமத்திற்கு உள்ளானதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மீண்டும் ஒருமுறை உங்கள் மொபைலை சுவிட் ஆஃப் செய்து மீண்டும் ஆன் செய்யுங்கள் என ஏர்டெல் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close