[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

காஃபியால் ஹேப்பி: விலை வீழ்ச்சியிலும் விவசாயிகள் மகிழ்ச்சி!

kerala-coffee-yields-farmers-happy

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் காஃபி விளைச்சல் ஏக்கருக்கு 300 கிலோ அதிகரித்துள்ளது.

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தின் மொத்த விவசாயத்தில் ஏலக்காய், காஃபி, மிளகு, ரப்பர் ஆகியவை 50% பங்கு வகிக்கிறது. இவற்றில் 15% காப்பி உற்பத்தி செய்யப்படுகிறது. காப்பியை பொறுத்தவரை “ரோபஸ்ட்ரா”, “அரேபிக்கா” என இரண்டு வகைகள் பயிரிடப்படுகிறது. ஆண்டு பயிரான காஃபி, ஜனவரி மாதம் விளைச்சலுக்கு வர ஆரம்பிக்கிறது. அந்தவகையில் தற்போது காஃபி செடியில் இருந்து பழங்கள் பறிக்கப்பட்டு அவை உலர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது.

சராசரியாக ஏக்கருக்கு 650 கிலோ கிடைக்கும் காஃபி, இந்த ஆண்டு 300 முதல் 350 கிலோ வரை அதிகரித்திருக்கிறது. எனினும், அதிக விளைச்சலால் சராசரியாக 250 ரூபாய் வரை விலை போக வேண்டிய ஒரு கிலோ ரோபஸ்ட்ரா காஃபி 85 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலும், 350 ரூபாய் வரை விற்பனையாக வேண்டிய அரேபிக்கா காஃபி 145 ரூபாய் முதல் 195 ரூபாய் வரையில் மட்டுமே விலை போகிறது. ஆனாலும் அதிக உற்பத்தி, விலை வீழ்ச்சியை ஈடுகட்டும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close