[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம்

playing-national-anthem-in-movie-theatres-not-mandatory-says-supreme-court

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

திரையரங்குகளில் படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய கீதம் இசைப்பதை கட்டாயமாக்கி 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளது. அதில், தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்கிற உத்தரவை மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பேசிய மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், “தேசிய கீதத்தை இசைப்பது தொடர்பான வழிமுறைகளை உருவாக்க 12 பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவைக் குழுவை மத்திய அரசு  அமைத்துள்ளது. இந்தக் குழு வழிமுறைகளை உருவாக்க 6 மாதங்களாகும். அதுவரை தேசிய கீதம் இசைப்பது கட்டாயம் என்பதை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

தேசிய கீதம் தொடர்பான பொதுநலன் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, 'தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மத்திய அரசால் அமைக்கப்பட்ட 12 பேர் கொண்ட அமைச்சரவைக் குழு திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது குறித்து இறுதி முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close