[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்

elephant-population-in-india

 இந்தியாவில் மொத்தம் 27,312 காட்டு யானைகள் இருப்பதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தை பொருத்தவரை 2761 காட்டு யானைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் 6049 யானைகளும், அஸ்ஸாம் மாநிலத்தில் 5719 யானைகளும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. மாஹாராஸ்டிரா மாநிலத்தில்தான் வெறும் 6 யானைகள் உள்ளன.

மாநில வாரியாக யானைகள் எண்ணிக்கை விவரம்: 

அருணாச்சல்: 1614, மேகாலயா: 1754, திரிபுரா:102, நாகாலாந்து: 446, மேற்குவங்கம்:488, மணிப்பூர்: 9, மிசோரம்:7, ஒடிசா:1976, ஜார்கண்ட்: 679, சட்டீஸ்கர்:247, பீகார்:25, மேற்குவங்கம் (தென்பகுதி):194, உத்தராகண்ட்:1839, உத்தரபிரதேசம்:232, ஹரியானா:7, ஹிமாச்சல்: 7, கேரளா:3054, ஆந்திரா:65, அந்தமான்:19

இதேபோல் யானைகள் உயிரிழப்பு குறித்தும் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2015 ஆண்டில் இருந்து தமிழகத்தில் 19 யானைகள் உயிரிழந்துள்ளன. இந்தியா முழுவதும் 176 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் 48 யானைகள் இறந்துள்ளது.நாடு முழுவதும் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக மத்திய வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி 1706 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை 2014 கணக்குப்படி 2226 ஆக உள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 2010ல் 163 ஆக இருந்த புலிகள் எண்ணிக்கை, 2014ல் 229 ஆக உள்ளது.நக்சல் பிரச்சனை காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தில் மட்டும் சரியாக கணக்கெடுப்பு நடத்தப்படாததால் புலிகளின் எண்ணிக்கையை சரிவர கணிக்க முடியவில்லை என்றும், மற்ற அனைத்து மாநிலங்களிலும் கணிசமான எண்ணிக்கையில் புலிகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே புலிகள் எண்ணிக்கை அதிகமாக 406 எனவும் அவை கர்நாடகத்தில்தான் உள்ளன என தெரிய வந்துள்ளது. அடுத்தப்படியாக உத்தராகண்டில் 340 புலிகள் உள்ளன.வேட்டையாடுதல் உள்ளிட்ட இயற்கைக்கு மாறாக இறந்தப் புலிகள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டில் 81 ஆகும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 3 புலிகள் கொல்லப்பட்டுள்ளன.அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 18 புலிகளும், அஸ்ஸாமில் 12 புலிகளும், உத்தராகண்டில் 10 புலிகளும் கொல்லப்பட்டுள்ளன.

Advertisement:
Related Tags : ElephantPopulationIndiaயானைகள்
Advertisement:
Advertisement:
[X] Close