[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: ராகுல்காந்தி சாடல்

rahul-gandhi-alleged-pm-modi

ஒரு கைதேர்ந்த ஜால வித்தைக்காரர் மக்களின் கவனத்தை திசைதிருப்புவது போல் பிரதமர் நரேந்திர மோடியும் முக்கிய பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

மோடியின் சொந்த ஊரான வாட்நகரில் பரப்புரை மேற்கொண்ட ராகுல் காந்தி, கடந்த 15 நாட்களாக பிரதமர் மோடி மக்களின் கவனத்தை முக்கியப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்புவதிலேயே கவனமாக இருப்பதாக கூறினார். பேசுவதற்கு எந்த விஷயமும் இல்லாமல் பிரதமர் சுயபுகழ் பாடிக்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நரேந்திர மோடி அரசு 3700 கோடி ரூபாயை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவு செய்திருப்பதாக கூறிய ராகுல்காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்தத் தொகை மக்களுக்கான சுகாதாரம் மற்றும் கல்விக்காக செலவு செய்யப்படும் என உறுதியளித்தார். முன்பு வேலைவாய்ப்புகள், ஊழல் ஒழிப்பு, கல்வி உள்ளிட்டவை குறித்து பரப்புரை மேற்கொண்டு வந்த பிரதமர் தற்போது வேலை வாய்ப்புகள் குறித்தோ வங்கி கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வது குறித்தோ பேசுவது இல்லை என சுட்டிக்காட்டினார். காங்கிரஸ் கட்சி நூறு நாள் வேலை திட்டத்திற்கு 35,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்ததாகவும் ஆனால் பாரதிய ஜனதாவோ டாடா நானோ தொழிற்சாலைக்கு 33,000 ரூபாயை அளித்துள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close