[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்: காங்கிரசுக்கு ஹர்திக் படேல் ஆதரவு

congress-hardik-patel-reach-deal-on-gujarat-special-category-quota

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பதாக படேல் இன மக்களின் இடஒதுக்கீட்டிற்காக போராடி வரும் ஹர்திக் படேல் அறிவித்துள்ளார்.

படேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி உறுதியளித்ததையடுத்து அந்த கட்சிக்கு தமது பட்டிடார் அனாமத் அண்டோலன் சமிதி ஆதரவு அளிக்கும் என 24 வயதான ஹர்திக் படேல் கூறினார். காங்கிரஸ் கட்சி அளித்துள்ள உறுதியின்படி படேல் இன மக்களுக்கு 50 சதவீதத்திற்கு மேலும் இடஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை என்றும் ஹர்திக் கூறினார்.

காங்கிரஸ் கட்சி இதுவரை மூன்று சாதித் தலைவர்களை தனது கூட்டணியில் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் தேர்தலில் வெற்றி பெற்று 22 ஆண்டுகளுக்கு பிறகு குஜராத்தில் அரசு அமைக்கலாம் என காங்கிரஸ் கருதுகிறது. ஹர்திக் படேல் - காங்கிரஸ் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக்கொள்வதாக கூறினார். இந்தியாவில் 50 சதவீதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதையும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close