[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

முட்டை விலை டெல்லியிலும் உயர்வு: ரூ.7 ஆனது

egg-rate-increase-in-delhi

தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் டெல்லியிலும் முட்டையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

பெரும்பாலான உ‌ணவு ‌பிரியர்கள், தங்களின் அ‌ன்றாட‌ உணவில் முட்டையை தவிர்த்து சாப்பிடுவது அரிது எனலாம்.‌ அந்‌‌த அளவிற்கு‌ குழந்தைகள் முதல் அனைத்து வயதினருக்கும் முட்டை விருப்ப உணவாக உள்ளது. இந்நிலையில் முட்டை விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி குறைந்து தேவை அதிகரித்ததே விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்பட்டது. தமிழகத்தில் அதிகரித்த முட்டை விலை, இப்போது தலைநகர் டெல்லியிலும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு 5‌ ரூபாய்க்கு விற்ற முட்டை தற்போது 7 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

டெல்லியில் ‌முட்டை உற்ப‌த்தி செய்யப்படுவதில்லை என்‌பதால் பஞ்சாப், ஹரியானா, தமி‌ழகம் போன்ற மாநிலங்கள் முட்டை தேவையை பூர்த்தி செய்து வரு‌‌கின்றன. விலை உயர்வு காரண‌மாக சில உணவகங்கள் ஆம்லெட், முட்டை பிரெட், ஆபாயில் போன்றவற்றின் விலையை உயர்த்தியுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close