[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS டெல்லியில் கூடிய எதிர்க்கட்சித்தலைவர்கள், குடியரசுத் தலைவரை சந்திக்க முடிவு
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தல் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

குஜராத் தேர்தல்: பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெ‌ளியீடு

gujarat-election-2nd-phase-of-bjp-candidate-released

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது.

182 தொகுதிகள் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலும் முடிந்த பின் டிசம்பர் 18-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்லுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது. படேல் சமூகத்தினர், பழங்குடியினர் என 36 பேர் அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் தற்போதைய அமைச்சர் உள்பட 12 எம்எல்ஏக்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. ஏற்கனவே 70 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருந்தது.

நவம்பர் 21-ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் சார்பில் இதுவரை வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close