[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்ட முதல்வர்

goa-cm-parrikar-tells-schoolkids-about-his-adult-movie-experience

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், தான் ‘அடல்ட் படம்’ பார்த்த அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

கோவாவில் நடைபெற்ற குழந்தைகள் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், மாணவர்களோடு கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள், “நீங்கள் சிறுவயதில் எந்த மாதிரியான படங்கள் பார்ப்பீர்கள்?” என்று கேட்டபோது, “நாங்கள் வெறும் படங்கள் மட்டும் பார்க்கவில்லை; அந்த காலகட்டத்தில் வந்த அடல்ட் படங்களையும் பார்த்தோம்” என்று வெளிப்படையாக பதிலளித்தார். மேலும், அந்தக்கால அடலட் படங்களில் நாங்கள் பார்த்ததை விட அதிகமாகவே நீங்கள் இப்போது டிவியில் பார்க்கிறீர்கள் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஒரு பிரபல அடல்ட் படத்திற்கு நானும் என் சகோதரரும் சென்றிருந்தோம். படத்தின் இடைவேளையின்போது, விளக்குகளை போட்டபிறகு பார்த்தால் என் பக்கத்துவீட்டுக்காரர் அமர்ந்திருந்தார். அந்த நபர் என் அம்மாவிடம் தினமும் மாலை வேளையில் பேசிக்கொண்டிருப்பார். நானும் எனது சகோதரர் அவ்தூத்தும் உடனடியாக திரையரங்கை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டோம். வீட்டுக்கு செல்லும் வழியில் அம்மாவிடம் என்ன சொல்லலாம் என யோசித்துவிட்டோம். வீட்டுக்கு சென்றவுடன் அம்மாவிடம், நாங்கள் ஒரு படத்துக்கு சென்றோம். அந்தப்படம் மிகவும் ஆபாசமாக இருந்தது. அதனால் நாங்கள் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டோம் என்று கூறிவிட்டோம். அடுத்தநாள் நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த நபர், எங்களை ‘அடல்ட் படம்’ ஓடும் திரையரங்கில் பார்த்ததாக அம்மாவிடம் கூறினார். அப்போது எங்கள் அம்மா, அவர்கள் எந்தப்படத்திற்கு சென்றார்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் ஏன் அந்தப்படத்திற்கு சென்றீர்கள் என்று கேட்டார்” என்று கூறினார்.

எனவே, சில பிரச்னைகளை சமாளிக்க முன்கூட்டியே முறையாக திட்டமிட வேண்டும் என்று மாணவர்களிடம் பாரிக்கர் கூறினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close