[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திரிபுரா மாநிலத்தில் உள்ள 59 சட்டபேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
  • BREAKING-NEWS கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் விரட்டியடிப்பு
  • BREAKING-NEWS இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.74; டீசல் ரூ.65.96
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி

குஜராத் தேர்தல்: 60,000 பாதுகாப்பு படை வீரர்களை அனுப்ப திட்டம்

gujarat-election-govt-plan-to-send-60-000-soldiers

குஜராத் மாநிலத் தேர்தலை முன்னிட்டு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் 14-வது சட்டப்பேரவைத் தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14-ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தலை எந்தவித பிரச்னையுமின்றி சுமூகமாக நடத்தும் பொருட்டு, மத்திய அரசு சுமார் 60,000 பாதுகாப்புப் படையினரை குஜராத் மாநிலத்திற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. இதில் சி.ஐ.எஸ்.எப்., பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஆர்.பி.எப்., உள்ளிட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் அடங்குவர். இதில் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்காக சமையல்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற அலுவலக ஊழியர்களும் அனுப்பப்படுகின்றனர். இதுதவிர பாதுகாப்புப் படையினரின் தேர்தல் பணிக்காக 650 ரயில் கோச்சுகளைத் தயார் நிலையில் வைக்குமாறு ரயில்வேயிடம் மத்திய அரசு கோரியுள்ளது.

குஜராத்தில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே ஆட்சியை தக்கவைக்க அக்கட்சி தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close