[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

ஆக்ரா சென்றார் யோகி ஆதித்யநாத்: தாஜ்மஹாலை பார்வையிடுகிறார்

yogi-adityanath-arrived-agra-and-visits-taj-mahal-today

தாஜ்மஹால் குறித்து பல சர்ச்சைகள் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தாஜ்மஹாலுக்குச் செல்கிறார். இதற்காக அவர் இன்று காலை ஆக்ரா சென்றுள்ளார்.

தாஜ்மஹாலுக்கு செல்லும் யோகி ஆதித்யநாத், ஷாஜகான், மும்தாஜ் கல்லறைகள் மற்றும் அருகிலுள்ள பூங்காவை பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், தாஜ்ம‌ஹாலில் இருந்து ஆக்ரா கோட்டைக்கு செல்லும் சுற்றுலா வழித்தடத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், உத்தரப் பிரதேச மாநில அரசு வெளியிட்டிருந்த சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹாலின் பெயர் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. தாஜ்மஹால் தற்போது இருக்கும் இடத்தில் சிவன் கோவில் இருந்ததாக பாஜக எம்.பி. கூறியிருந்தும் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், அவரது தாஜ்மஹால் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவேப் பார்க்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close