[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

பாஜகவின் சித்தாந்தத்தை நான் எதிர்க்கிறேன்: ராகுல் அறைகூவல்

the-congress-vice-president-is-on-a-visit-to-gujarat

பாஜகவின் சித்தாந்தத்தைத்தான் நான் எதிர்க்கிறேன், ஆனால் அவர்களை இந்தியாவிலிருந்தே ஒழிக்க வேண்டும் என நான் நினைக்கவேயில்லை என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். 

குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி தொழில்முனைவோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது  அவர், 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. அது எங்கள் கண்களைத் திறந்து விட்டது. இதற்காக பாஜகவிற்குதான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். காங்கிரஸ், பாஜக இரண்டுமே இந்திய மக்களின் நிலைப்பாடுகள். நான் காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை தேர்ந்தெடுத்தேன்.ஆகவே நான் பாஜக சித்தாந்தத்திற்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால் ஒருபோதும் பாஜகவை நாட்டை விட்டே ஒழிக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை என்றார்.
மேலும் நாள்தோறும் 3 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புக்கான சந்தையில் புதிதாக நுழைகின்றனர்.ஆனால் ஒரு நாளைக்கு 450 பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் நாள்தோறும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வேலை வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தித் தரவில்லை என்றால் நாட்டு மக்களின் கோபம் விஸ்வரூபம் எடுக்கும் என அவர் கூறினார். 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close