[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

செவிலியர்கள் செய்த சிசேரியனால் குழந்தை உயிரிழப்பு

nurses-who-have-a-caesarean-section-the-baby-dies

ஒடிஷாவில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு செவிலியர்களே அறுவை சிகிச்சை செய்ததால் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிஷாவில் கேந்திரபடா சாய் என்ற மருத்துவமனையில் பிரசவத்திற்காக பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது மருத்துவர் இல்லாத காரணத்தினால் அந்தப் பெண்ணுக்கு, தொலைபேசி வாயிலாக மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று, செவிலியர்களே சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். இதனால் அந்தப் பெண்ணுக்கு பிறந்த குழந்தை உயிரிழந்துள்ளது.

பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒடிஷா அரசு உடனடியாக  உத்தரவிட்டுள்ளது. மேலும்  அறுவை சிகிச்சையின்போது மருத்துவர் அருகில் இல்லாததே இந்த துயர சம்பவத்திற்கு காரணம் என்று அப்பெண்ணின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close