[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீ தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல்
  • BREAKING-NEWS தமிழில் விஜய் நடிப்பில் ஸ்ரீதேவி நடித்து வெளியான புலி திரைப்படமே அவரின் கடைசி படமாகும்
  • BREAKING-NEWS ஸ்ரீதேவியின் மறைவுக்கு தமிழ் மற்றும் இந்தி நடிகைகள் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்
  • BREAKING-NEWS நடிகை ஸ்ரீதேவி திடீர் மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார். 
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை

ஜம்மு எல்லையில் 14 அடி அகல தீவிரவாதிகளின் குகை கண்டுபிடிப்பு

bsf-thwarts-pakistan-s-infiltration-designs-unearths-14-foot-long-tunnel-in-j-k-s-arnia-sector

ஜம்மு எல்லை பகுதியில் 14 அடி அகலமுள்ள புதிய குகை ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 

ஜம்மு பகுதியிலுள்ள நகரம் அரினா. இது ஒரு சிறிய நகரம். 9 ஆயிரம் மக்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதி. இந்தப் பகுதியில் டோக்ரி மொழி பேசக் கூடிய மக்கள் வசிக்கின்றனர். இந் நகரத்தின் எல்லையில் புதியதாக 14 அடி அகலமுள்ள ரகசிய குகை ஒன்று இந்திய ராணுவத்தினரால் கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் குகைப் பகுதி நேராக பாகிஸ்தான் சர்வதேச எல்லையோடு இணைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தக் குகை மூலம் இந்தியாவில் ஊடுருவி நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் குகைக்குள் இருந்து உணவு பொட்டலங்கள் மற்றும் வீடியோ கேமிரா, டார்ச் லைட் பாட்டரி பொருட்கள், வெடி மருந்துகள் கிடைத்துள்ளன.

இது ராணுவ அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close