[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஐத் தாண்டியது

kolkata-flyover-collapse-death-toll-rises-to-21-over-80-injured

கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டுவந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20ஐத் தாண்டி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக பாலப்பணிகளை மேற்கொண்ட கட்டுமானப் பணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

வடக்கு கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியிலுள்ள கணேஷ் டாக்கீஸ் என்ற இடத்தில் இந்த‌ விபத்து நேரிட்டது. கட்டுமானப் பணியின்போது பாலம் இடிந்ததால், தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். மேலும், பாலம் இடிந்து சாலையில் விழுந்ததால், அவ்வழியே சென்ற வாகனங்களும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன. பாலம் இடிந்து விழும் காட்சி சி.சி.டி.வி கேமராவிலும் பதிவானது.

இந்த விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 85க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதிதிதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது குறித்து மேற்குவங்க அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக கட்டுமானப் பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் மீது மூன்று பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம்‌ ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவித்தார். இதனிடையே, விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close