[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

பிறந்த நாள் பரிசாக மோடிக்கு 68 பைசா காசோலைகளை அனுப்பிய விவசாயிகள்

for-pm-modi-s-birthday-andhra-pradesh-farmers-send-68-paise-cheques

மோடிக்கு பிறந்த நாள் பரிசாக ஆந்திர விவசாயிகள் ஆயிரக்கணக்கான 68 பைசா மதிப்பிலான காசோலைகளை பிரதமருக்கு அனுப்பி உள்ளனர்.

ஆந்திராவின் ராயல்சீமா, கர்னூல், கடப்பா, அனந்தபூர் மற்றும் சித்தூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் நீர் பாசன வசதிக்கு உதவி கேட்டும் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் விவசாயிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் 68 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தொண்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து 68 பைசா காசோலைகளைப் பெற்று பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. விவசாயிகளின் அவல நிலையை உணர்த்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close