[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

தமிழகத்தின் இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

sc-to-hear-petition-over-against-tn-reservation-tom

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலை சேர்ந்த மாணவி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.  

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று பெரும்பான்மையாக (சுமார் 85 விழுக்காடு) உள்ள மக்களுக்கு, இடஒதுக்கீடு கடந்த 1980 முதல் சுமார் 34 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், “69 சதவீதம் இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்றும் இட ஒதுக்கீடு முறையால் ஒவ்வொரு ஆண்டும் "மாணவர்கள் பாதிக்கப்படுவதால் இந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த திருமால் மங்கள் என்ற மாணவி சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். 

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா முன்பு முறையிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்த மனு அவசர வழக்காக வரும் (நாளை) திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவித்தார். 69% இடஒதுக்கீடு முறைக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close