[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

உலகக்கோப்பை கிரிக்கெட்டை கண்டுகளித்த போது விபரீதம்: பீர் பாட்டிலால் குத்தி இளைஞர் கொலை

man-stabbed-to-death-after-scuffle-over-dog-barking-during-india-australia-match

பெங்களூருவில் உள்ள ஜேசி நகரில் இந்தியா- ஆஸ்திரேலியா டி-20 உலகக்கோப்பை ஆட்டத்தை இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டுகளித்த போது நடந்த கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்.

விறுவிறுப்பு நிறைந்த இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டை நாடெங்கும் ரசிகர்கள் நேற்று உற்சாகமாக கண்டுகளித்தனர். அதைப்போல் பெங்களூருவில் உள்ள ஜேசி நகரில் ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த போது ஜான் கென்னடி என்பவர் தனது நாயுடன் வந்து ஆட்டத்தை அவரும் ரசித்தார்.

அப்பொழுது அவருடன் வந்த நாய் லொல் லொல் என தொடர்ச்சியாக குரைத்ததால் அங்கிருந்தவர்களுக்கு சிறிது இடையூறு ஏற்பட்டது. உடனே மற்றவர்கள் அனைவரும் ஜான் கென்னடியிடம் நாயை அழைத்துக்கொண்டு வெளியே செல்லுமாறு கூச்சலிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஜான் கென்னடி நாயுடன் இடத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் தனது ஆதரவாளர்களுடன் வந்த ஜான் கென்னடி, தன்னை வெளியே செல்லுமாறு கூறியவரிடம் தகராறு செய்தார். அப்போது ஏற்பட்ட சண்டையில் அங்கிருந்த ஒருவரை ஜான் கென்னடி பீர் பாட்டிலால் குத்தினார். இதனால் அதிகப்படியான ரத்தம் வெளியேறி குத்தப்பட்ட நபர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜான் கென்னடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close