[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி: இடிபாடுகளில் சிக்கி 30 பேர் தவிப்பு!

building-collapses-5-people-death-30-people-were-trapped-in-the-ruins

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக பலியாயினர். 30 பேர் இடிபாடுக்குள் சிக்கிக்கொண்டனர்.

மும்பையில் உள்ள காட்கோபர் எல்.பி.எஸ்.மார்க்கில் இருந்த சாய்தர்ஷன் என்ற நான்கு மாடி கட்டிடம் இன்று காலை 10.30 மணிக்கு திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் அதில் வசித்த சுமார் 40-க்கும் மேற்போட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படைக்கு தகவல் கொடுத்துவிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

8 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 8 பேர் பரிதாபமாக பலியாயினர். 30-க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளனர். கட்டிடங்களுக்குள் அவர்கள் சிக்கியுள்ளதால் இடிபாடுகளை நீக்கிவிட்டு அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.

’கட்டிடத்தின் கீழே இருக்கும் கிளினிக்கிற்காக, ஒரு பகுதி இடிக்கப்பட்டு கட்டுமானப்பணி நடந்தது. இதன் காரணமாகத்தான் கட்டிடம் இடிந்து விழுந்தது’என்று அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close