[X] Close
JUST IN

விமானத்தில் செல்ல கத்தியுடன் வந்த பாஜக எம்.பி.

priyanka-singh-rawat-come-with-knife

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. பிரியங்கா சிங் ரவாத், கத்தியுடன் விமானம் ஏற வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

உத்தரபிரதேசம் பாராபங்கி தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரயங்கா சிங் ரவாத். இவர், டெல்லியில் இருந்து லக்னோ செல்வதற்காக, டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரது கைப்பையை மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள், எக்ஸ்ரே மூலம் சோதனை செய்தனர். அதில், கைப்பயில் கத்தி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய பாதுகாப்பு படை வீரர்கள், கத்தியை எடுத்துக் கொண்டு விமானத்தில் செல்ல கூடாது என்று கூறினர். முதலில் அது கத்தியே இல்லை என்று சாதித்த எம்.பி. பின்னர் அது தன்னுடைய மகனுடையது என்று கூறி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் கத்தியுடன் உள்ளே செல்வேன் என்று பாதுகாப்பு படையினரிடம் எம்.பி. பிரியாங்கா மோதலிலும் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் வேறு வழி இல்லாமல் கடைசியாகக் கத்தியை அந்த இடத்திலேயே போட்டு விட்டு விமானம் ஏறியிருக்கிறார். மேலும் தான் ஒரு எம்.பி என்றும் தன்னை தடுத்ததற்காக பாதுகாப்பு படையினர் மீது வழக்கு பதிவு செய்வேன் என்றும் அவர் மிரட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த பிரியாங்கா, அவ்வாறான சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close