[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

ரஜினியை பாஜகவுக்கு அழைக்கவில்லை... அமித்ஷா

bjp-chief-amitshah-on-rajini-s-political-entry

ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால் வரவேற்பதாகவே தாம் கூறியதாகவும், அவரை பாஜகவுக்கு அழைப்பதாகக் கூறவில்லை என்றும் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நான்காம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைத்துள்ளது. அரசின் சாதனைகள் குறித்து மோடி பெஸ்ட் என்ற பெயரில் அரசு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இன்று முதல் ஜூன் 15 வரை நாடு முழுவதும் சுமார் 900 நகரங்களில் இந்த விழாக்கள் கொண்டாடப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக டெல்லியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ரஜினிக்கு பாஜகவின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருக்கும் என்று கூறியது குறித்த கேள்வியை செய்தியாளர்கள் எழுப்பினர். இந்த கேள்விக்குப் பதிலளித்த அமித் ஷா, ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பதாக மட்டுமே நான் தெரிவித்தேன். அவரை பாஜகவுக்கு அழைப்பதாகக் கூறவில்லை. அரசியலில் ஈடுபடுவது குறித்து ரஜினிதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினார்.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close